இனி தடுப்பூசி போடாதவர்களுக்கு மருத்துவமனையில் இலவச சிகிச்சை கிடையாது!

நம் இந்தியத் திருநாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம்உள்ள மாநிலமாக காணப்படுகிறது கேரளா.கேரளாவில் நாளொன்றுக்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது.

pinarayi

 

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 19 பேர் கேரளாவில் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கேரளாவில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் எண்ணிக்கையும் சற்று அதிகமாக காணப்படுகிறது.

இது குறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் சில முக்கிய அறிவிப்புகளை கூறியுள்ளார். முதலில் அவர் திருவனந்தபுரத்தில் ஆய்வு செய்த பின்னர் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறைடம்   கலந்து பேசி முடிவு எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அதன்படி பள்ளியில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஆசிரியர்கள் வாரத்திற்கு ஒரு முறை தங்களிடம் நெகட்டிவ் சான்றுகள் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதோடு அவர்கள் சொந்த செலவில் வாரம் ஒவ்வொரு முறையும் பரிசோதனை மேற்கொண்டு நெகட்டிவ்  சான்றிதழை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதோடு தடுப்பூசி போடாதவர்கள் இனி இலவச சிகிச்சை கிடையாது என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment