Connect with us

தமிழ்த்தாயையே அவமதித்து விட்டார்கள்! மன்னிக்கவே கூடாது!!: ராமதாஸ்

tamilthai 3

செய்திகள்

தமிழ்த்தாயையே அவமதித்து விட்டார்கள்! மன்னிக்கவே கூடாது!!: ராமதாஸ்

தமிழ்த்தாயையே அவமதித்து விட்டார்கள்! மன்னிக்கவே கூடாது!!: ராமதாஸ்

நேற்றைய தினம் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தினை ரிசர்வ் வங்கி ஊழியர்கள் அவமதித்தனர். தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது என்று செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இன்று காலை சென்னை பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆர்பிஐ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ramadass

புகார் வரும் வரை காத்திருக்காமல் தமிழக அரசும், காவல்துறையும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்துவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திட்டமிட்டே மரியாதை செய்ய மறுத்திருப்பது தமிழ்தாயை அவமதிக்கும் செயல் என்றும் ராமதாஸ் கூறினார். ஒன்றிய அரசு அதிகாரிகளாக இருந்தாலும் தமிழ்நாட்டில் மாநில அரசின் விதிகளை மதிக்க வேண்டும் என்றும் கூறினார்.

தமிழ் தாயை அவமதித்தவர்களை மன்னிக்கவே கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top