மதுரையில் நேற்றைய தினம் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த நிகழ்வு நடைபெற்றது, மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியது. இதுகுறித்து மதுரை மாவட்ட செல்லூர் ராஜு கருத்தினை கூறியுள்ளார். அதன்படி மதுரை சித்திரை திருவிழாவில் இரண்டு உயிர்கள் பலியான சம்பவத்திற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை, பொதுப்பணித்துறை தான் காரணம் என்று எம்எல்ஏ செல்லூர் ராஜு கூறினார்.
மதுரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். அரசு அதிகாரிகளுக்கு முக்கியஸ்தர்களுக்கு பாதை ஒதுக்கிவிட்டு மக்கள் செல்ல பாதை வசதி ஏற்படுத்தித் தரவில்லை என்றும் செல்லூர் ராஜு குற்றச்சாட்டை வைத்தார்.
அந்த கூட்டத்தில் பேசிய அவர் அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த தொடர்பு இல்லை என்பது நிரூபணமாகி விட்டது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.