
செய்திகள்
தேசமெங்கும் பரவும் தேவர் ஜெயந்தி! வைரலாகும் பிரதமர் மோடியின் ட்விட்!!
தேசமெங்கும் பரவும் தேவர் ஜெயந்தி! வைரலாகும் பிரதமர் மோடியின் ட்விட்!!
இன்றைய தினம் தமிழகத்தில் 114 வது தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை கொண்டாடப்பட்டது. இதற்கு ஏராளமான அரசியல் தலைவர்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலை மற்றும் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் பசும்பொன்னுக்கு வந்து, அவர் இருந்த இடத்தை சுற்றி பார்த்து, தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதிமுக சார்பிலும் இதுபோன்று மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது பாரத பிரதமர் நரேந்திர மோடி தேவர் ஜெயந்தியை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார். அதன்படி நாம் தேவரின் பங்களிப்பை நினைவுகூர்வோம் என்று கூறியுள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூறுவோம் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மிகவும் துணிச்சலான மற்றும் கனிவான உள்ளம் கொண்ட அவர், பொதுநலன் ,சமூக நீதிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
விவசாயிகள், தொழிலாளர்களின் நலனுக்காக பல முயற்சிகளை மேற்கொண்டார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்று பிரதமர் ட்விட் செய்துள்ளார்.
