
தமிழகம்
இந்த மாணவிகளுக்கு ரூ.1000 கிடையாது..? வெளியானது அதிரடி அப்டேட்!!
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக நகை கடன் தள்ளுபடி செய்தல், பயிர் கடன் தள்ளுபடி செய்தல்,மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி செய்தல் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை அரசு செய்துள்ளது.
அந்த வகையில் தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு பதிலாக அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார். இந்த திட்டத்திற்கு தகுதியான மாணவிகளிடம் வங்கு கணக்கு எண், சான்றிதழ்களை சேகரிக்க வேண்டும் என கல்லூரி முதல்வர்களுக்கும் உயர்கல்வித்துறை சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது.
இந்த சூழலில் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற மாணவிகள் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையில் அரசுப்பள்ளிகளில் படித்திருக்க வேண்டும் என கூறியுள்ளது. அதே போல தனியார் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் பயின்று பின்பு 9 முதல் 12 வகுப்பு வரையில் அரசு பள்ளிகளில் பயன்ற மாணவிகளிலும் இத்திட்டத்திற்கு தகுதியுடையவர்கள் என கூறியுள்ளது.
மேலும் தொலைதூர மற்றும் திறந்த வெளி பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவிகளுக்கு இத்திட்டன் மூலம் உதவிகள் வழங்கப்பட மாட்டாது என்றும் இத்திட்டம் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் மருத்துவம் பயலும் மாணவிகளும் இறுதி ஆண்டு மாணிகள், இளங்கலை மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன் அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க www.penkalvi.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
