சுரைக்காயின் மருத்துவ குணங்கள் இவைகள்தான்!!

27d871b4cfc9dd8b665d533f7d6f1e99

சுரைக்காயினை அதிக அளவிலான குழந்தைகள் சாப்பிட மறுப்பதுண்டு, காரணம் அதன் சுவை மற்றும் வாசனையினால் தான். இப்போது சுரைக்காயின் மருத்துவ குணங்கள் குறித்து நான் சொல்வதைக் கேட்டால் நிச்சயம் நீங்கள் சுரைக்காயினை ஒதுக்காமல் சாப்பிடுவீர்கள்.

உடல் சூடு, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சிறுநீர்கத்தில் கல் இருத்தல் போன்றவற்றிற்கு சுரைக்காயினைவிட சிறந்த தீர்வாக எதுவும் இருக்காது. சுரைக்காயில் ரசம், சாம்பார், பொரியல், கூட்டு, அல்வா என நாம் ஏதாவது ஒரு வகையில் செய்து சாப்பிடவும் செய்யலாம்.

மேலும் சர்க்கரை நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினைக் கட்டுக்குள் வைக்க சுரைக்காயினை வாரத்தில் 2 முறை என்ற அளவில் கட்டாயம் சேர்த்துக் கொண்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.
 
மேலும் சுரைக்காயில் உள்ள அதிக அளவு நீர்ச் சத்தானது உடலில் கொழுப்பினை சேர்க்கவிடாமல் இருப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனை உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் சுரைக்காயினை கட்டாயம் தினசரி ஏதாவது ஒரு வகையில் எடுத்துக் கொண்டால் உடல் எடை மளமளவென குறையும்.

மேலும் இது சிறுநீர்ப் பெருக்கத்தை அதிகரித்து கெட்ட நீரையும் உடலில் இருந்து வெளியேற்றுகின்றது, மேலும் சுரைக்காய் செரிமானப் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. மேலும் இது எளிதில் செரிமானமாகும் தன்மை கொண்டுள்ளதால் சுரைக்காயை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews