விநாயகருக்கு விருப்பமானவை இவைகளா?!

வீதி எங்கும் வீற்றிருப்பவர் வீர விநாயகர். விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு விருப்பமான உணவுப் பொருட்களை படைத்து பூஜை வழிபாடுகள் நடக்கும். ஆலயங்களில் மட்டுமின்றி வீடுகளிலும் ஆர்வமுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகக் கொழுக்கட்டை படைத்து வழிபடுவார்கள். மேலும் வழிப்பாட்டில் விநாயகருக்கு பிடித்தமான அப்பம், சுண்டல், வடை, அவல், பொரிகடலை போன்றவற்றையும் பழ வகைகளில் வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் போன்றவைகளையும் படைத்து சிறப்பாக வழிபாடு செய்வார்கள்.

78eb1eff8443b7704ba1e80929fb1ccc

விநாயகர் மிகவும் எளிமையானவர். அருகம்புல் மாலைக்கு அடிமையானவர். தேங்காய் மாலைக்கு விருப்பமுடையவர். குளக் கரையில் வீற்றிருப்பவர்.

விநாயகருக்கு மிகவும் பிடித்தமான வண்ணங்கள் மஞ்சள் மற்றும் பச்சை. சூரிய காந்தி மலரின் மஞ்சள் வண்ணம் மிகவும் பிடித்த ஒன்று.

விநாயகருக்கு அவரை நம்பும் பக்தர்களை காத்தருளும் தன்மை அதிகமுள்ளவர். அவரை நம்புபவரை கைவிடாது காத்தல் எப்போதும் செய்பவர்.

விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகருக்கு மிகவும் பிடித்த உணவுப் பொருட்களை படைத்து சிறப்பு வழிபாடு செய்து விநாயகரின் அருளைப் பெற்றிடுவோம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.