Connect with us

இவர்கள் தான் இனிமேல் துணைமேயர்!! அதிலும் ஆதிக்கம் செலுத்திய திமுக…!!

deputy mayor

தமிழகம்

இவர்கள் தான் இனிமேல் துணைமேயர்!! அதிலும் ஆதிக்கம் செலுத்திய திமுக…!!

இவர்கள் தான் இனிமேல் துணைமேயர்!! அதிலும் ஆதிக்கம் செலுத்திய திமுக…!!

இன்றைய தினம் தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு தலைமைப் பொறுப்பு மறைமுக தேர்தல் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. முன்னதாக மேயர் மற்றும் நகர்மன்றத் தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.

அதில் பல பகுதிகளில் திமுகவின் ஆதிக்கமே அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் தற்போது துணை மேயர் மறைமுக தேர்தல் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் போட்டியின்றி பல திமுக மற்றும் கூட்டணி கட்சி துணை மேயர் வேட்பாளர்கள் தேர்வாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த படி சென்னை மாநகராட்சியின் துணை மேயராக திமுகவை சேர்ந்த மகேஷ் குமார் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயராக திமுகவை சேர்ந்த காமராஜ் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

கடலூர் மாநகராட்சியின் துணை மேயராக  தாமரைச்செல்வன் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். கரூர் மாநகராட்சியின் துணை மேயராக திமுகவை சேர்ந்த தாரணி சரவணன் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

நெல்லை மாநகராட்சியின் துணை மேயராக திமுகவை சேர்ந்த கே.ஆர்.ராஜு போட்டியின்றி தேர்வாகியுள்ளார். திருப்பூர் மாநகராட்சியின் துணை மேயராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாலசுப்பிரமணியன் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

சிவகாசி மாநகராட்சியின் துணை மேயராக விக்னேஷ் பிரியா போட்டியின்றி தேர்வாகியுள்ளார். திண்டுக்கல் மாநகராட்சியின் துணை மேயராக திமுகவை சேர்ந்த ராஜப்பா போட்டியின்றி தேர்வாகியுள்ளார். கோவை மாநகராட்சியின் துணை மேயராக திமுகவை சேர்ந்த வெற்றிசெல்வன் போட்டியிட்டு தெரிவாகியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top