நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169 வது திரைப்படமான ஜெயிலர் திரைப்படத்தின் எதிர்பார்ப்பானது ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இந்நிலையில் ஜெயிலர் படத்தில் நடிகர்கள் விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 80 கிட்ஸ் காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரையில் எண்ணற்ற படங்களில் நடித்து வரும் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
இந்த சூழலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் ஜெயிலர் படத்தின் கட்டவுட்-க்கு புதுக்கோட்டை ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இத்தகைய வீடியோவை பார்த்த மற்ற ரசிகர்கள் உண்மையான ரசிகர்கள் என்றால் இவர்கள்தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
#Thalaivar fans celebrating Vinayaka Chaturthi by doing paal Abishagam for #Thalaivar cut out (Thootukudi) 😍😍😍❤️❤️❤️ #Jailer pic.twitter.com/iEltvUA9kr
— Prasanna (@tweetngrose) August 31, 2022