பாலக்கீரையில் உள்ள நன்மைகள் இவைகள்தான்!!

11fbafc8529159d97517e618e139814c-1

பாலக்கீரை ஒரு கட்டு 10 முதல் 15 ரூபாய்க்கு சந்தைகளில் விற்கப்படுகின்றது. ஆனால் இதன் நன்மைகள் இதன் விலையினைத் தாண்டியதாகவே உள்ளது. இப்போது பாலக்கீரையில் உள்ள நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பாலக்கீரை அதிக அளவு கால்சியம் சத்தினைக் கொண்டதாக உள்ளது. அதனால் பற்கள் வலுவிழந்து காணப்பட்டாலோ, ஈறுகள் வீக்கம் அடைந்து இருந்தாலோ, எலும்பு பலவீனமாக இருந்தாலோ கட்டாயம் பாலக்கீரையினை உணவில் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

மேலும் சர்க்கரை நோயாளிகள் அவர்களின் உடலில் உள்ள சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைக்க நினைத்தால் பாலக்கீரையினை உணவில் சேர்த்தல் நல்லது.

கர்ப்பிணிப் பெண்கள் தங்களுடைய கர்ப்ப காலங்களில் போலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்வர். கர்ப்ப காலத்தில் துவங்கி குழந்தைக்குப் பாலூட்டுதல் காலம் வரை போலிக் ஆசிட் தேவைப்படுவதால் போலிக் ஆசிட் அதிகமாக உள்ள பாலாக்கீரையினை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

பாலாக்கீரை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதாக உள்ளது. இதனை உடல் நலம் குன்றியவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
 
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பாலக்கீரையினை எடுத்துக் கொள்ளும்போது இரத்த அழுத்தம் குறையும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.