தேர்தல் வாக்குறுதி ஒன்னு! நடக்கிறது ஒன்னு! எங்க ஆட்சியிலேயே இவைகளின் விலை குறைவு!!

ஈபிஎஸ்

தற்போது நம் தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது.  தமிழகத்தில் முதல்வராக உள்ள மு க ஸ்டாலின் தேர்தலில் தான் கூறிய  வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக காணப்படுகிறது.

இருப்பினும் ஒரு சில வாக்குறுதிகள் இன்னும் நிறைவேறவில்லை. இது குறித்து தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டு கூறியுள்ளார்.சிமெண்ட்

அதன்படி தமிழகத்தில் தொடர்ச்சியாக கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே காணப்படுகிறது. இதற்கு எதிர் கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி பெரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியவாறு முக்கியமான கட்டுமான பொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்த்திடும்  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறிய பட்டியலில் சிமெண்ட், மணல், கட்டுமான பொருள்கள் மரம் போன்றவற்றை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் திமுக கொண்டு வரும் என்று தேர்தல் அறிக்கையில் கூறி இருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கட்டுமான பொருட்களின் விலை அதிகமாக உள்ளது.  மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் சிமெண்ட் மூட்டைகளின் விலை 100 ரூபாய் அதிகமாக காணப்படுகிறது.

மேலும் இங்கு விற்கப்படும் கட்டுமான பொருட்கள், சிமென்ட், மணல், ஜல்லி போன்றவைகளை விட பிற மாநிலங்களில் 30% குறைவாகவே விற்பனை செய்வதாக காணப்படுகிறது என்றும் பிற மாநில விலை நிலவரம் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.மேலும் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அதிமுக ஆட்சியின் இவைகளின் விலையை ஒப்பிட்டு கூறியுள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print