இவர்களும் விடுதலை போராட்ட வீரர்கள் தான்! பிரதமர் தலையிட வேண்டும்; தமிழ்நாடு பங்களிப்பு முக்கியம்: ஸ்டாலின்
இன்று காலை தமிழர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. அதன்படி ஜனவரி 23ஆம் தேதி முதல் நடைபெற உள்ள குடியரசு தின கொண்டாட்ட விழாவில் தமிழ்நாட்டு வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழக வாகனத்தின் வ.உ.சி, வேலு நாச்சியார், படம் இருந்தும் சர்வதேச தலைவர்களுக்கு இவர்கள் யாரென்று தெரியாது எனக் காரணம் கூறி ஒரு நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன்படி டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி புறக்கணிப்பு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் உடனே தலையிட்டு தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார். டெல்லி அணிவகுப்பில் தமிழ்நாட்டின் பங்களிப்பை உறுதி செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
வேலு நாச்சியார், பாரதியார், வ.உ.சி, மருது சகோதரர்கள் ஆகியோரும் விடுதலைப் போராட்ட வீரர்கள் என்று முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பாரதியார், வேலுநாச்சியார், வ.உ.சி, மருது சகோதரர்கள் உருவங்கள் மறுக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது என்று முதலமைச்சர்.
