Connect with us

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்-அடுத்த சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் கிடையாது!

மெகா தடுப்பூசி முகாம்

Tamil Nadu

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்-அடுத்த சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் கிடையாது!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்-அடுத்த சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் கிடையாது!

பொதுவாக நம் தமிழகத்தில் முதலில் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதன் பின்னர் அசைவப் பிரியர்களின் கோரிக்கையை ஏற்று சனிக்கிழமை தடுப்பூசி முகாம் மாற்றப்பட்டது. இதனால் இன்றைய தினம் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இது தமிழகத்தின் 22வது மெகா தடுப்பூசி முகாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அடுத்த வாரம் சனிக்கிழமை தடுப்பூசி முகாம் இருக்குமா? என்ற கேள்விகளும் சந்தேகமும் நிலைக்குக் கொண்டு வருகிறது. ஏனென்றால் அடுத்த வாரம் சனிக்கிழமை நம் தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தடுப்பூசி முகாம் தள்ளி வைக்கலாம் அல்லது மாற்றி வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதன்படி வரும் சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்த இயலாது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளதால் வரும் சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்த இயலாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழ் நாட்டில் 90 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டனர் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். மருத்துவமனைகள் மற்றும் நிரந்தரமாக தடுப்பூசி போடும் இடங்களில் வழக்கம்போல் தடுப்பூசி போடப்படும் என்றும் அவர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top