Connect with us

இந்தாண்டு அல்வா கிண்டும் நிகழ்ச்சி கிடையாது! எதிர்பார்ப்புகள் மத்தியில் பட்ஜெட் கூட்டத்தொடர்!!

halwa

செய்திகள்

இந்தாண்டு அல்வா கிண்டும் நிகழ்ச்சி கிடையாது! எதிர்பார்ப்புகள் மத்தியில் பட்ஜெட் கூட்டத்தொடர்!!

இந்தாண்டு அல்வா கிண்டும் நிகழ்ச்சி கிடையாது! எதிர்பார்ப்புகள் மத்தியில் பட்ஜெட் கூட்டத்தொடர்!!

2022-2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி நடக்க உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் கடந்த ஆண்டு காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யபட்டது.இது சுதந்திரம் பெற்ற பின் முதல் முறையாக இத்தகைய செயல் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.  அதே போல் இந்த ஆண்டும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு கொரோனா மற்றும் ஒமைக்ரான் சற்று அதிகமாக இருப்பதால் அல்வா கிண்டும் நிகழ்ச்சியை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு பட்ஜெட் தொடர்பான அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் யூனியன் பட்ஜெட் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த யூனியன் பட்ஜெட் செயலியில் நிதியமைச்சர் பட்ஜெட் உரை ஆண்டு, நிதிநிலை அறிக்கை, மானிய கோரிக்கைகள், நிதி மசோதா என 14 விதமான ஆவணங்களை அரசியல் சாசனத்தில் பரிந்துரைப்படி முழுமையாக பார்வையிடலாம் என்றும் கூறப்படுகிறது.

இது ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் காணப்படுகிறது. வழக்கமாக பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கி விடும். பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் பணி பட்ஜெட் தாக்கல் தினத்துக்கு 10 நாளுக்கு முன்பே துவங்கும்.

இந்த பணி துவங்கும் போதே இதனை குறிக்கும் வகையில் அல்வா கிண்டும் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு இந்த அல்வா கிண்டும் நிகழ்ச்சியை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top