தமிழகத்தில் மே மாதம் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இதனால் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு கட்டாய முக கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு தற்போது கூறியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள் என அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் பொது தேர்வு நடைபெறும் போது தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் போது தடையற்ற மின்சாரம் வழங்க மின்சார வாரியம் சுற்றறிக்கை கொடுத்துள்ளது.
தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்பட்டால் மாற்று வசதி ஏற்படுத்தவும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் மின்சார வாரியம் கூறியுள்ளது.
நாளை மறுநாள் முதல் பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் மண்டல தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது தேர்வு மையங்களில் மின் வாரிய அதிகாரிகள் முன்கூட்டியே மின் பாதைகள் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
மேலும் பொதுத்தேர்வு மையங்களுக்கு அருகே உள்ள மின்மாற்றி பழுதடைந்தால் உடனே மாற்றமும் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புக்கு மே 5ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதியும், பதினோராம் வகுப்பு மே 10-ஆம் தேதியும் தேர்வு நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.