Connect with us

பள்ளிகளில் ஜாதி, மத, அரசியல் ரீதியான பாகுபாடு கூடாது!: அன்பில் மகேஷ்

discrimination

செய்திகள்

பள்ளிகளில் ஜாதி, மத, அரசியல் ரீதியான பாகுபாடு கூடாது!: அன்பில் மகேஷ்

பள்ளிகளில் ஜாதி, மத, அரசியல் ரீதியான பாகுபாடு கூடாது!: அன்பில் மகேஷ்

சில தினங்களுக்கு முன்பு நம் தமிழகத்தில் தஞ்சை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மறுபிரேத பரிசோதனை ஆய்வு தேவையில்லை என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனை பாஜகவினர் மதமாற்றத்தால் மாணவி உயிரிழந்ததாக குற்றச்சாட்டினை வைத்திருக்கின்றனர். ஆனால் மாணவியின் மரண வாக்குமூலத்தில், தந்தை அளித்த புகாரின் மதமாற்றம் பற்றிய எந்தவொரு குறிப்பும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

anbil 1200

இந்நிலையில் பலரும் இதற்கு வன்மையாக எதிர்த்து வருகின்றனர். அந்த வரிசையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகளில் ஜாதி மத அரசியல் ரீதியிலான பாகுபாடுகளை எக்காரணத்தைக் கொண்டும் ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.

தஞ்சை பள்ளி மாணவியை மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக யாரும் புகார் கூறவில்லை என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். மாணவியின் மரணத்தில் விடுதி காப்பாளர் விவகாரத்தில் கைதான நிலையில் விசாரணை முடிவில் உண்மையான வெளிவரும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் அதற்கான விலையை தந்தே ஆக வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top