ஜெயலலிதாவுக்கு 2 நினைவிடம் தேவையில்லை என்ற கருத்து தவறு இல்லை! வேதா நிலையம்-மேல்முறையீடு தள்ளுபடி!

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெற்றது. அதில் தொடர்ச்சியாக இரண்டு முறை தமிழகத்தின் இரும்பு பெண்மணி, அம்மா என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதா வெற்றி பெற்றார். அவரின் மறைவுக்குப் பின்னர் போயஸ் கார்டன் இல்லம் பற்றி தொடர்ந்து விவாதம் நடைபெற்றுக் கொண்டே இருந்தது.

இந்த நிலையில் வேதா நிலையத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்ய பட்ட வழக்கை தள்ளுபடி செய்ததாக காணப்படுகிறது. அதன்படி வேதா நிலையத்தை அரசு இல்லமாக மாற்றிய உத்தரவை ரத்து செய்தது சரியே என்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.

சென்னை ஹைகோர்ட் தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்தது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு. தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து அதிமுக மற்றும் சிவி சண்முகம் தொடர்ந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

ஜெயலலிதாவுக்கு இரண்டாவது நினைவிடம் தேவையற்றது என்ற தனி நீதிபதி கூறிய கருத்தில் தவறு ஏதுமில்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. பொது நோக்கத்துக்காக நிலம் கையகப் படுத்தப் படவில்லை; அரசியல் காரணத்துக்காக கையகப்படுத்தப்பட்டதாக இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது.

வேதா இல்லத்தை கையகப்படுத்திய நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக இல்லை விதிமீறல்கள் உள்ளன என்ற தனி நீதிபதியின் தீர்ப்பு சரியானது என்றும்  இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறினர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment