வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி… 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் ஒன்றும் இல்லை!: மத்திய அரசு
தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் நம் இந்தியா உலக சாதனை படைத்துக் கொண்டு வருகிறது அதிலும் குறிப்பாக 150 கோடிக்கும் தடுப்பூசி அதிகமான இதுவரை செலுத்தப்பட்டுள்ளன. ஜனவரி 3ஆம் தேதி முதல் 15 வயது 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கும் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது.
இதனால் மாணவர்கள், மாணவிகள் அனைவரும் வரிசையாக தங்களது ஆதார் அட்டையை கொண்டு வந்து தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். இந்த நிலையில் 12 வயது முதல் 14 வயது உள்ள சிறார்களுக்கும் தடுப்பூசி போடவேண்டும் என்ற பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் மத்திய அரசு தற்போது அதனை மறுத்து உள்ளது. அதன் படி 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் குறித்த எந்த ஒரு முடிவும் தற்போது எடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
குறிப்பிட்ட வயது சிறார்களுக்கு விரைவில் தடுப்பூசி இயக்கம் என்று அண்மையில் தகவல் வெளியான நிலையில் மத்திய அரசு இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது. 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தத் திட்டம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
