நீட் தேர்வில் பாஸ் செய்தும் பயனில்லை! விரக்தியில் மாணவியின் தந்தை செய்த செயல்;

பல மாணவ மாணவிகளின் மருத்துவ கனவிற்கு பெரும் தடையாக அமைந்துள்ளது நீட்தேர்வு தான். ஏனென்றால் பலரும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்லதொரு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் நீட் தேர்வு அவர்களுக்கு பெரும் தடையாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் தனது மகள் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்லதொரு மதிப்பெண் பெற்று இருந்தும் எம்பிபிஎஸ் சீட் கிடைக்காததால் தந்தை ஆளுநருக்கு மாணவியின் சான்றிதழை அனுப்பி வைக்க கோரிக்கை வைத்துள்ளார்.

அதன்படி நீட்டில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ கனவு நிறைவேறாததால் மாணவியின் பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழை ஆளுநருக்கு அனுப்ப தந்தை கோரிக்கை வைத்துள்ளார். பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ரயீஸாவின் தந்தை ஜாகிர் உசேன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவி ரயீஸா நீட் தேர்வில் 150 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தார். எம்பிபிஎஸ், சித்தா படிப்புகளுக்கு விண்ணப்பித்தும் மாணவிக்கு மருத்துவ சீட்டு கிடைக்கவில்லை என்று தந்தை ஜாகிர் உசேன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பிளஸ்டூ மதிப்பெண் நீட் தேர்ச்சியும் எவ்வகையிலும் பலன் தரவில்லை என்று மாணவியின் தந்தை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment