தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை… பிரபல தெலுங்கு நடிகர் ஓபன் டாக்….!

தெலுங்கில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் நானி. இவர் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமான நடிகர் தான். இவர் நடிப்பில் உருவான நான் ஈ படம் தமிழிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது நானி நடிப்பில் உருவாகியுள்ள ஷியாம் சிங்கா ராய் படம் கடந்த 24ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நானி

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் நானி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அந்த பேட்டியில் நானியிடம், ஆந்திராவில் சமீபத்தில் டிக்கெட் விலை குறைப்பை கண்டித்து இதுவரை சுமார் 300 திரையரங்குகள் மூடப்பட்டது குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த நானி, “வக்கீல் சாப் படத்தின் வெளியிட்டின்போது முன்னணி நடிகர்கள் ஒன்றிணைந்திருந்தால் இன்று இந்தளவு பிரச்சனை வந்திருக்காது. நான் எந்த அரசுக்கும் எதிரானவன் கிடையாது. ஆனால், எதிர்பாராதவிதமாக தெலுங்கு திரையுலகில் ஒற்றுமை இல்லை” என மிகவும் ஓபனாக கூறியுள்ளார்.

கோலிவுட் போல் டோலிவுட் கிடையாது. தெலுங்கு சினிமாவில் இருக்கும் பெரும்பாலான நடிகர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். உதாரணமாக சிரஞ்சீவி, பவன்கல்யாண், பாலகிருஷ்ணா, நாகர்ஜூனா என்று மூத்த நடிகர்களும் அவர்களின் வாரிசுகளும் தான் தற்போது தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் நானி தெலுங்கு திரையுலகில் நடிகர்கள் மத்தியில் ஒற்றுமையில்லை என கூறியிருப்பது பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகர் நானியின் இந்த கருத்துக்கு பலரும் சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment