அவசர நிலை பிரகடனத்தால் எந்த தீர்வு கிடைக்காது; ஐரோப்பிய யூனியன் !!

இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது குறித்து ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கடந்த சில வாரங்களாக கடும் பொருளாதார  நெருக்கடி  ஏற்படுவதால் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத நிலையில் திண்டாடி வருகின்றனர்.

இதனால் அந்நாட்டு மக்கள் இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் மேலும் தீவிரமடைந்து  விட்டதால்  கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே  அவசர நிலையில் பிரக்கணம் செய்வதால் நாட்டின் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என இலங்கைக்கான ஐரோப்பிய யூனியன் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தெற்கு ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடான இலங்கையில் மக்கள் கடந்த ஒரு வாரமாக அமைதியான முறையில் போராடி வந்தனர். இதனால் நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என ஐரோப்பிய யூனியன் தெரிவித்தது.

அமைதியான முறையில் போராடும் இலங்கை மக்களுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என கூறியுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் கூறியது. இந்நிலையில் நாட்டை முன்னோக்கி செல்லும் நீண்டகால தீர்வை தான் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அவசர நிலை பிரகடனம் எதற்கும் தீர்வாகது என்று கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment