நிமோனியா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறையா? – ஒன்றிய அரசு விளக்கம்..!!!

இந்தியாவில் நிமோனியா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இல்லையென்றும் புள்ளிவிவரங்களின் படி, நாடு முழுவதும் 70.18 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது..

இந்தியாவில் பருவமழை தொடங்கியிருப்பதால் வைரஸ்கள் பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதன் காரணமாக நிமோனியா காய்ச்சலானது அதிகமாக பரவி வருகிறது.

சமீபத்தில் கூட சென்னையில் நிமோனியா காய்ச்சலால் குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று  அதிகளவு ஏற்பட்டது.   இதன் காரணமாக  அரசு மருத்துவ மனை படுக்கைகள் நிரம்பியது.

இந்த சூழலில் சில தினங்களுக்கு முன் நிமோனியா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாகவும் வதந்திகள் பரவ தொடங்கியது. இத்தகைய தகவலை ஒன்றிய அரசு மறுத்துள்ளது.

குறிப்பாக நாடு முழுவதும் புள்ளிவிவரங்கள் படி 70.18 லட்சக் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக ஒன்றிய அரசி விளக்கம் கொடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment