கோவில் நிலங்கள் பட்டா போட்டுக் கொடுக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும் என்றும் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்து இந்து அறநிலையத்துறை அமைச்சராக பதவி ஏற்றிருந்த அமைச்சர் சேகர்பாபு அவர்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதை அவர் மீட்டு வருகிறார் என்பதும் இதுவரை நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் மீட்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து இடங்களும் மீட்கப்படும் என்றும் தெரிவித்தார். இறைவன் சொத்து என்றால் அது இறைவனுக்கு மட்டுமே என்கிற அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் இதில் பாகுபாடு எதுவும் காணப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் தமிழ்நாட்டு கோவிலுக்கு சொந்தமான 180 ஏக்கர் நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டதாகவும் கோவில் நிலங்களை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தால் 5 ஆண்டுகள் சிறை விதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்