ஒரே சீருடை சட்டத்திற்கு தடை இல்லை! சீருடை பற்றி சட்டத்தில் எதுவும் இல்லை!!
கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டதுக்குப்பின் பெரும் கலவரம் நிகழ்ந்து கொண்டு வருகிறது. இஸ்லாமிய பெண்கள் வழக்கம்போல் ஹிஜாப் அணிந்து பள்ளி கல்லூரிகளுக்கு சென்று இருந்தனர். அவர்களை ஹிஜாப் அணிய கூடாது என்று பலரும் வற்புறுத்தினர்.
இதனால் அங்கு இந்து சமூக மாணவர்களும் இஸ்லாமிய சக மாணவர்களும் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடகாவில் ஒரே சீருடை சட்டத்துக்கு தடை இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. கர்நாடக அரசின் ஒரே சீருடைத் திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சினையை விரிவான அமர்வு விசாரிக்கும் என்று நீதிபதி கிருஷ்ணா தீட்சித் அறிவித்துள்ளார். ஒரே சீருடை தொடர்பான அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க கோரும் மனுவை விரிவான அமர்வு விசாரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மாணவர்களுக்கான சீருடை குறித்து எந்த வழிகாட்டுதலும் கர்நாடக கல்வி சட்டத்தில் இல்லை என்று மனுதாரரின் வழக்கறிஞர் கூறியுள்ளார். ஹிஜாப் அணிந்த மாணவிகளை வகுப்புகளுக்கு அனுமதிக்காததால் அவர்களுக்கு கல்வி பாதிக்கப்படுகிறது என்று மனுதாரரின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
சீருடையை பொருத்தவரை மாநில அரசு மாற்றி மாற்றி பேசுவதாக மனுதாரர் வழக்கறிஞர் குற்றசாட்டு வைத்துள்ளார்கள். சிறார்கள் மனதை புண்படுத்தி படிக்க வற்புறுத்துவது எவ்வாறு ஏற்க முடியும் என்று மனுதாரர் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
சீருடை அணியாமல் வந்ததால் மாணவர்களுக்கு அபராதம் விதிக்கக் கூட சட்டத்தில் இடமில்லை என்று மனுதாரர் வழக்கறிஞர் வாதம் புரிந்தார். மாணவிகள் அனைவரும் சீருடை அணிந்தே கல்லூரிக்கு வருகிறார்கள் என்றும் மனுதாரர் வழக்கறிஞர் கூறினார்.
