Connect with us

குட்நியூஸ்!! ‘தமிழகத்தில் இதுவரை இல்ல; இனியும் இருக்காது’… பேரவையில் கெத்துகாட்டிய செந்தில் பாலாஜி!

Senthil balaji

செய்திகள்

குட்நியூஸ்!! ‘தமிழகத்தில் இதுவரை இல்ல; இனியும் இருக்காது’… பேரவையில் கெத்துகாட்டிய செந்தில் பாலாஜி!

குட்நியூஸ்!! ‘தமிழகத்தில் இதுவரை இல்ல; இனியும் இருக்காது’… பேரவையில் கெத்துகாட்டிய செந்தில் பாலாஜி!

கோடைகாலத்தில் சீரான மின்விநியோகம் நடைபெறுகிறது தமிழகத்தில் மின் வெட்டே இல்லை என சட்டப்பேரவையில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கோடை காலத்தில் சீரான மின்விநியோகம் செய்ய கோரி எதிர்க்கட்சிகள் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழத்தில் கடந்த மார்ச் 29 ம் தேதி உச்ச பட்ச மின் நுகர்வாக 17 லட்சத்து 196 மெகாவாட் இருந்ததாக தெரிவித்தார்.

மேலும் தற்போது மின்சார பற்றா குறை 2500 மெகாவாட் உள்ளது அதனை சீர் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. குறுகிய கால மற்றும் மத்திய கால கொள்முதல் அடிப்படையில் ஏப்ரல் மாதத்திற்கு 3047 மெகா வாட்டும் , மே மத்திற்கு 3007 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டு வருகிறது.

மேலும் 1000 மெகாவாட் மின்சாரம் சூரிய ஒளி மின்சாரம் மற்றும் என் எல் சி யிடம் 1500 மெகா வாட் மின்சாரம் பெறப்பட உள்ளது. நாளொன்றுக்கு 72000 டன் நிலக்கரி தேவையாக உள்ளது ஆனால் மத்திய அரசு 48000டன் மட்டுமே அளிக்கிறது.

நிலைமையை சரிசெய்ய 4 80000 டன் நிலக்கரி கொள்முதல் செய்ய டெண்டர்விடப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் டெண்டர் நிறைவடையும் எனவும் தமிழகத்தில் இதுவரை மின்வெட்டு இல்லை எனவும் பரமரிப்பு காரணங்களுக்காக போதிய முன்னறிவிப்பு வெளியிடபட்ட பின்னரே மின்வெட்டு செய்யப்பட்டது. மேலும் திமுக ஆட்சியில் மின் வெட்டே ஏற்படாது என

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top