ஓராண்டுக்கு முன்பு கடிதம் எழுதியும் எந்த பயனும் இல்லை; மீண்டும் தயாநிதி மாறன் கடிதம்!

மோடிக்கு திமுக கட்சி சார்பில் அடுத்தடுத்து கோரிக்கை வைக்கப்படுகிறது. இந்த நிலையில் திமுக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்துள்ளார்.

தயாநிதி மாறன்

அதன்படி சென்னையில் தொடர்ந்து பயனற்ற நிலையில் உள்ள வானிலை ஆய்வு கருவிகளை போர்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு தயாநிதிமாறன் கோரிக்கை வைத்துள்ளார். வானிலை ஆய்வு கருவிகளை சரிசெய்ய கோரி பிரதமர் மோடிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கடிதத்தின் வாயிலாக இத்தகைய கோரிக்கையை தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுகம் நூற்றாண்டு கட்டிடத்தில் பழுதடைந்துள்ள உடனே சரிசெய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். பள்ளிக்கரணையில் சோதனை முயற்சியில் உள்ளவாறு தயார் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என்றும் திமுக எம்பி தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

பள்ளிக்கரணை

பள்ளிக்கரணை ரேடார் குறித்து தங்களுக்கு டிசம்பர் 2ஆம் தேதியே கடிதம் எழுதினேன் என்றும் தயாநிதி மாறன் கூறினார். ஓராண்டு கழிந்தும் எந்தவித சீரமைப்பு பணிகளை ஒன்றிய அரசு மேற்கொள்ளவில்லை என்றும் தயாநிதிமாறன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் 6ஆம் தேதி இரவு அதிகபட்சமாக சென்னையில் 200 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 2015 ஆண்டுக்கு பிறகு இதுவே அதிகபட்சம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் நவம்பர் 6-ம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தவறுகள் இடம்பெற்றுள்ளன என்றும் தயாநிதிமாறன் கடிதத்தில் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி

நவம்பர் 6  மழை குறித்து எந்தவித அறிகுறியும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் இடம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறியுள்ளார். பழுதான எஸ்.பேண்ட் ரேடார் மற்றும் பள்ளிக்கரணைரேடார்யிணை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் கூறினார். தேசிய வானிலையியல் துறை, ஒன்றிய புவி அறிவியல் துறை ஆகியவை உறுதி செய்ய கோரிக்கை வைத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment