டெல்லியில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை!: அரவிந்த் கெஜ்ரிவால்

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேகமாக பரவிய கொரோனாவின் பாதிப்பு மீண்டும் இந்தியாவில் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது. இதன் காரணமாக இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒரு லட்சத்தை தாண்டி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

இந்த சூழலில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது. இவ்வாறுள்ள நிலையில் டெல்லியில் ஊரடங்கு அமல் படுத்த வாய்ப்பில்லை என்று டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் தமிழகத்தை ஒப்பிட்டு பார்த்தால் டெல்லியில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகமாக பதிவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில் டெல்லியில் முழு ஊரடங்கு அமல் படுத்தும் திட்டம் இல்லை என்று டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்தால் ஊரடங்கு அமல்படுத்த மாட்டோம் என்று டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி அளித்துள்ளார். மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் கட்டுப்பாடுகளை விதிப்பதை அரசின் நோக்கம் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment