News
தமிழகத்தில் ஆக்சிசன் தடை என்பதே இல்லை!இனியும் இருக்காது!அமைச்சர் விஜயபாஸ்கர்!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்று முடிந்தது. சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளனர். அதிமுக கட்சிகளுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்து உள்ளன. அதிமுகவில் பலரும் கடந்த முறை போட்டியிட்ட தொகுதியில் மீண்டும் வேட்பாளராக களமிறங்கி உள்ளனர். அதிமுக ஆட்சியில் இருக்கும்போது தமிழகத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருந்தார் அதிமுக எம்எல்ஏ விஜயபாஸ்கர். மேலும் அவர் தமிழகத்தில் சுகாதாரத்திற்காக பல்வேறு பணிகளில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஜல்லிக்கட்டு போதும் அதிகமாக பேசப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து சில தகவல்களை கூறி வருகிறார். மேலும் அதன்படி அவர் தமிழகத்தில் தடை இன்றி தடுப்பூசி போடப் போவதாக கூறியுள்ளார் .மேலும் தமிழகத்தில் மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி எந்த ஒரு தடையுமின்றி போடப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும் கொரோனா வெல்லும் பேராயுதம் தடுப்பூசி என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தடுப்பூசி சேமிப்பு கிடங்கில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.
மேலும் அவர் தடுப்பூசி வீணாகாமல் தடுக்க அறிவுரை வழங்கி உள்ளதாகவும் கூறி, தடுப்பூசி போடும்போது வதந்தி அதிக அளவில் வருவது வாடிக்கையாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கூடுதலாக 5 லட்சம் கோவாக்ஸின் டோஸ் வரும் என எதிர்பார்க்கிறோம் என்றும் கூறுகிறார். மேலும் தமிழகத்தில் ஆக்சிசன் தட்டுப்பாடு என்பதே இல்லை என்றும் இனியும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருக்காது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும் எல்லாரும் ஒரே நேரத்தில் ஒரே மருத்துமனைக்கு செல்வதால் தான் படுக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என்றும் அவர் கூறினார்.
