மதுரை ஏர்போர்ட்டில் பரிசோதனை மையம்; தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு ஒன்றும் இல்லை!: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்;

உலகிற்கு அச்சத்தைக் கொடுக்கும் நாடாக மாறியுள்ளது தென்னாப்பிரிக்கா. ஏனென்றால் தென்னாப்பிரிக்காவில் கடந்த சில வாரங்களாக ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியா சில சில நாடுகளை பட்டியலிட்டு அதனை ஆபத்திற்குரிய நாடாக வைத்துள்ளது.

சுப்பிரமணியன்

அதோடு மட்டுமில்லாமல் அந்நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தனிமைப் படுத்தப் படுகின்றனர். இத்தகைய  ஒமைக்ரான் பாதிப்பு தமிழகத்தில் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

11 நாடுகளிலிருந்து வந்த 747 பேருக்கு ஒமைக்ரான்  வைரஸ் பரிசோதனை நடத்தியதில் யாருக்கும் பாதிப்பில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் கூறியுள்ளார். அமைச்சர் சுப்பிரமணியன் மதுரை விமான நிலையத்தில் பரிசோதனை மையத்தை தொடங்கியபின் இவ்வாறு பேட்டியளித்தார்.

ஒமைக்ரான்  பாதிப்பில்லாத நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ரேண்டம் அடிப்படையில் 2% பரிசோதனை நடத்தப்படுகிறது என்றும் அமைச்சர் கூறினார். துபாயில் இருந்து மதுரை வந்த 174 பயணிகளுக்கு விமான நிலையத்தில் ஒமைக்ரான் பரிசோதனையை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் ஆறு பேர் உட்பட 174 பேருக்கு 18 பேர் அடங்கிய சுகாதார குழுவினர் ஒமைக்ரான்  பரிசோதனையை நடத்தி வருகின்றனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment