தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்க விதிகள் இல்லை!! – உயர்நீதி மன்றம்!!!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க விதிகள் இல்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளனர். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தியிருந்தனர். அதன்படி 2018 ஆம் ஆண்டு விழா ஒன்றில் தமிழ் தாய் வாழ்த்து விஜயேந்திரர் எழுந்து நிற்கவில்லை என்று கூறி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் புரிந்தனர்.

ஐகோர்ட் மதுரை

அதோடு அவர் தேசிய கீதத்திற்கு மட்டும் எழுந்து நின்றார் என்றும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வில்லை என்றும் கூறி நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ராமேஸ்வரம் காஞ்சி மட மேலாளர் அளித்த புகாரில் நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாம் தமிழர் கட்சியினர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் தமிழ்தாய் வாழ்த்து என்பது ஒரு இறைவணக்கப் பாடல் தான் தவிர, அது ஒன்றும் தேசியகீதம் கிடையாது என்று கூறினார்.

தமிழ் தாய் வாழ்த்தின் போது எழுந்து நிற்க வேண்டும் என்ற ஒரு விதிகள் கிடையாது என்றும் நீதிபதி சுவாமிநாதன் கூறினார். ராமேஸ்வரம் காவல்துறையினர் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment