Connect with us

மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை ரூ. 2000!!! தமிழக அரசு அரசாணை;

disabled

தமிழகம்

மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை ரூ. 2000!!! தமிழக அரசு அரசாணை;

மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை ரூ. 2000!!! தமிழக அரசு அரசாணை;

தற்போதைய நம் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக தேர்தலுக்கு முன்பு திமுக கூறியிருந்த ஒவ்வொரு வாக்குறுதிகள் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அவை பெரும்பாலும் மக்களுக்கு பிரயோஜனம் அளிப்பதாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக நகர்ப்புற பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா இலவச பயண சேவை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

ஆவின் பால் விலை குறைப்பும் சாமானிய மக்களுக்கு மிகுந்த பயன் அளித்தது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கும் சில சலுகைகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை உயர்த்தி உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.

ஐந்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை உயர்த்தி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பு உதவித் தொகையை ரூபாய் 1500 லிருந்து ரூபாய் 2000 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் பயனடைவர் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top