தமிழகத்தில் அம்மா உணவகம் மூடப்படாது! அந்த எண்ணமும் இல்லை!: ஸ்டாலின்

இன்று 3வது நாளாக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் அடுத்தடுத்து ஆளும் கட்சியை பார்த்து பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகிறார். அதற்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி பயிர் பாதிப்பு குறித்து கேள்விகளை கேட்டார்.

1.62 லட்சம் ஹெக்டேர் பயிர் பாதிப்புக்கான நிவாரணமாக ரூபாய் 132.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி குற்றங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்து வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் நேற்றையதினம் அம்மா உணவகம் பற்றி மிகவும் காரசாரமான விவாதம் நிகழ்ந்தது.

அதற்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தக்க பதில் அளித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் அம்மா உணவகங்கள் ஒருபோதும் மூடப்படாது என்றும், அம்மா உணவகங்களை மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லவே இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் தடுப்பூசி இயக்கம், மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். தமிழ்நாட்டில் தடுப்பூசி இயக்கத்தில் எந்த சுணக்கமும் இல்லை என்று முதலமைச்சர்  ஸ்டாலின் கூறினார். தமிழ்நாட்டில் சிறார்களுக்கான தடுப்பூசி இயக்கமும் தங்குதடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.கொரோனா பெருந்தொற்றில் யாரும் உயிர் இழந்து விடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment