மாணவர்களே அலர்ட்! நாளை விடுமுறை கிடையாது..!!

சென்னையில் நாளைய தினம் பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மாண்டஸ் புயலின் காரணமாக கடந்த 9-ம் தேதி சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் விடுமுறையை ஈடு செய்ய நாளை சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெடியா இருங்க! டிச.20-ம் தேதி இந்த மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழை?

இதனிடையே மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வேலை நாள் என்று மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் திரு.மார்க் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனிடையே வெள்ளிக்கிழமை பாட திட்டத்தை பின்பற்றி வகுப்புகள் இயங்க வேண்டும் எனவும் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவுறுத்தியுள்ளார்.

மலேஷியாவில் நிலச்சரிவு: பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

அதே போன்று செங்கல்பட்டு மாவட்டத்திலும் மாணவர்களுக்கு தேர்வு நாளாக அமைக்கப்பட்டு 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் நாளை வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.