#breaking….தமிழகத்தில் ஹிஜாப் பிரச்சனை கிடையாது-அன்பில் மகேஷ்;

பிப்ரவரி முதல் வாரத்தில் கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. அந்த நாளே ஹிஜாப்  விவகாரம் பிரச்சனையாக காணப்பட்டது. எப்போது போல இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு சென்றனர்.

அவர்கள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்லக்கூடாது என்றும் ஹிஜாப் அணிந்தவர்கள் வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்காமல் தடை செய்தனர். இது மிகப் பெரிய கலவரமாக உருமாறியது.

இத்தகைய ஹிஜாப் விவகாரம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் காணப்பட்டது. இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு கர்நாடக உயர்நீதிமன்றம் ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசு கூறியுள்ள தடை செல்லும் என்று கூறியது.

இதனால் இஸ்லாமியர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் இன்று தாம்பரத்தில் இஸ்லாமியர்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆறு இஸ்லாமிய மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இது குறித்து தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கருத்துக் கூறினார். அதன்படி தமிழ்நாட்டில் ஹிஜாப் பிரச்சனை கிடையாது என்று கூறினார். வேற்றுமையில் ஒற்றுமை காணும் தமிழ்நாட்டில் ஹிஜாப் பிரச்சனை கிடையாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

தேனி பள்ளியில் நடந்த சம்பவம் பற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment