
தமிழகம்
ஈபிஎஸ்ஸும் இல்ல, ஓபிஎஸ்ஸும் இல்ல; இவர்கள்தான் எங்களுக்கு!!-அதிமுக
கடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி புகைப்படங்கள் கொண்ட பேனர்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.
ஆனால் இன்று நடக்கின்ற கூட்டத்தில் வெறும் எடப்பாடி பழனிசாமியின் படம் உள்ள பதாகைகள் மட்டுமே வரிசையாக வைக்கப்பட்டுள்ளது. எனவே முற்றிலுமாக அதிமுக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை புறக்கணித்துள்ளதாக தெரிகிறது.
மேலும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் கருதப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரின் படங்களும் ஒன்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அதிமுக பொதுக்குழு மேடையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் படங்கள் இடம்பெறவில்லை.
பொதுக்குழு மேடையில் முன்னாள் முதல்வர்கள் ஆன புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன், புரட்சித்தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
