Connect with us

தமிழ்நாடு மாதிரி எந்த மாநிலத்திலும் யானை பராமரிப்பு இல்லை!: உயர்நீதிமன்றம் பாராட்டு

elephant 1

செய்திகள்

தமிழ்நாடு மாதிரி எந்த மாநிலத்திலும் யானை பராமரிப்பு இல்லை!: உயர்நீதிமன்றம் பாராட்டு

தமிழ்நாடு மாதிரி எந்த மாநிலத்திலும் யானை பராமரிப்பு இல்லை!: உயர்நீதிமன்றம் பாராட்டு

தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள பல கோவில்களில், கோவில் யானைகளும் அதிகமாகவே காணப்படுகிறது. இந்த கோவில் யானைகள் நன்றான முறையில் பராமரிக்கப்படுகின்றன.

கோவில் பராமரிப்பு குறித்து ஹைகோர்ட் பாராட்டு அளித்துள்ளது. கோவில் மற்றும் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு தொடர்பாக வரைவு விதிகள் வகுக்கப் பட்டுள்ளன என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.

கோவில் யானை பராமரிப்பு, உகந்த வாழ்விடம், ஆண் யானை கொண்டுவருவது தொடர்பான வழக்குகள் பிப்ரவரி முதல் வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் யானை புத்துணர்வு முகாம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என்று ஐகோர்ட் நீதிபதிகள் பாராட்டினர்.

யானைகள் இணை சேர்வது அவற்றின் இயல்பான, இயற்கையான நடவடிக்கை என்றும், யானையை கொண்டுவர உத்தரவிட முடியாது என்றும் ஹை கோர்ட் கூறியுள்ளது. ஸ்ரீரங்கம் கோவில் யானைகளுக்கு வாழ்விடம் அமைக்க 5 ஏக்கர் மற்றும் 48 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அறநிலையத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top