
News
#breaking…2024ஆம் ஆண்டு வரை தேர்தல் இல்லை என தீர்மானம்!!!
உலக அளவில் தற்போது ஸ்ரீலங்கா பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால் அங்குள்ள மக்கள் தினந்தோறும் அரசுக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனென்றால் அங்கு அத்தியாவசியப் பொருள்களின் தேவையும் அதிகரித்தது மட்டுமல்லாமல் அவைகளின் பற்றாக்குறையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.
இதன் மத்தியில் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளதால் மக்கள் சாலைகளில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதன் விளைவாக கடந்த வாரம் இலங்கையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே தனது பதவியை விலகினார்.
பதவியை விட்டு அவர் ராஜினாமா செய்த அன்றைய தினம் இலங்கையில் கலவரம் வெடித்தது. இந்த நிலையில் தற்போது இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே திகழ்கிறார்.
அவருக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்றது. இந்த நிலையில் இலங்கையில் 2024ஆம் வரை தேர்தல் இல்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை சீர் செய்யும் வரை 2024ம் ஆண்டு வரை எவ்வித தேர்தலையும் நடத்தாமல் இருக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றதை அடுத்து அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.
