டியூசன் எடுக்கும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கிடையாது?

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக இந்திய அரசாங்கம் கொண்டாடிக் கொண்டு வருகிறது. ஏனென்றால் அவர் ஆசிரியராக இருந்து பல்வேறு விதமான பணிகளில் சிறப்புற ஆற்றினார்.

அவரை பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் தமிழகத்திலும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும் வழங்கப்படும்.

இந்த நிலையில் அடுத்த மாதம் செப்டம்பர் என்பதால் தற்போது டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு யார் யாரெல்லாம் தகுதியானவர்கள் குறித்தான வரம்புகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி 2021 2022 ஆம் கல்வியாண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பற்றிய சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு ஒருபோதும் டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் பெயரை பரிந்து இருக்க கூடாது என்று எச்சரித்து கூறியுள்ளது.

அரசியல் தொடர்பில் ஆசிரியர்களின் பெயர்களையும் மாநில நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்க கூடாது என்றும் பல்வேறு துறை கூறியுள்ளது. தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் சி இ ஓ தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஐந்தாண்டுகள் எந்த புகார் இருக்கும் இடம் தராமல் ஆசிரியராக பணியாற்றி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment