கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு இழப்பீடு கிடையாது – முதல்வர் அதிரடி!!

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பவர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்க முடியாது என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் சரண் மாவட்டம் சாப்ரா பகுதியில் கள்ளச்சாரம் குடித்து இதுவரையில் 50 பேர் உயிரிழந்தனர். அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்த பல பேருக்கு மருத்துவ மனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவ மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரெடியா இருங்க! டிச.20-ம் தேதி இந்த மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழை?

இந்நிலையில் அம்மாநிலத்திம் மதுவிலக்கு அமல்படுத்திய போதிலும் இதுபோன்ற நிகழ்வு நடைப்பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழலில் சட்டப்பேரவையில் கள்ளச்சாராயம் குடித்து 40 பேர் உயிரிழந்தது தொடர்பாக பாஜகவினர் விமர்சனம் செய்தனர்.

இத்தனை பேர் உயிரிழந்ததற்கு பீகார் அரசே காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தனர். அப்போது பேசிய முதலமைச்சர் நிதிஷ் குமார் குஜராத்தில் மோர்பி தொங்கு பாலம் விபத்தில் அவ்வளவு பேர் உயிரிழந்தும் ஊடகங்களில் ஒரு நாள் மட்டுமே பேசப்பட்டது என கூறினார்.

மாணவர்களே அலர்ட்! நாளை விடுமுறை கிடையாது..!!

பின்னர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது எனவும் மது குடிப்பதால் உயிரிழப்புகள் நேரிடும் என எச்சரித்த போதிலும் மீண்டும் குடித்து உயிரிழந்தால் எப்படி இழப்பீடு வழங்க முடியும் என்ற கேள்வியை முன் வைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.