Connect with us

பெட்ரோல் விலை குறைய வாய்ப்பே இல்லையா? 16வது நாளாக குறையாத விலை…!!

petrol diesel 1200

News

பெட்ரோல் விலை குறைய வாய்ப்பே இல்லையா? 16வது நாளாக குறையாத விலை…!!

பெட்ரோல் விலை குறைய வாய்ப்பே இல்லையா? 16வது நாளாக குறையாத விலை…!!

ஏப்ரல் மாதம் தொடங்கியவுடன் பல்வேறு விதமான பொருட்களின் விலையும் அதிகரித்தது. அதுவும் குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை நூற்றி முப்பத்தி ஆறு நாட்களுக்குப் பின்பு மீண்டும் விலை அதிகரிக்க தொடங்கியது.

அதுவும் குறிப்பாக நாளொன்றுக்கு சராசரியாக பெட்ரோல் டீசல் விலை 70 காசுகள் உயர்ந்தது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த ஒரு மாற்றத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கவில்லை.

இதனால் சென்னையில் 16வது நாளாக பெட்ரோல் டீசல் விலை மாறாமல் காணப்படுகிறது. எனவே சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.85க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே வேளையில் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 100.94க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 16 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த ஒரு மாற்றம் இல்லாவிட்டாலும் பெட்ரோல் டீசலின் விலை என்னமோ மிகவும் அதிகமாகவே காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top