தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பே இல்லை! மீனவர்களுக்கு எச்சரிக்கை!!: வானிலை ஆய்வு மையம்;

வடகிழக்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக தமிழகத்தில் கடந்த மாதம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில் டிசம்பர் மாதம் தொடங்கியதும் தமிழகத்தில் கனமழை மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.

இவ்வாறு உள்ள நிலையில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பே இல்லை வானிலை மையம் கூறியுள்ளது. அதன்படி இன்று முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தலைநகர் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குமரி கடல் பகுதிகளில் 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

குமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கையுடன் செல்ல  அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 19,20 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment