Connect with us

கோடநாடு செல்ல எங்களுக்கு எந்த தடையும் இல்லை..!!: சசிகலா வழக்கறிஞர்

சசிகலா

செய்திகள்

கோடநாடு செல்ல எங்களுக்கு எந்த தடையும் இல்லை..!!: சசிகலா வழக்கறிஞர்

கோடநாடு செல்ல எங்களுக்கு எந்த தடையும் இல்லை..!!: சசிகலா வழக்கறிஞர்

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாக அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் நேற்றும் இன்றும் சசிகலாவிடம் கோடநாடு கொலை, கொள்ளை பற்றி விசாரணை நடத்தப்படுகிறது.

இதுகுறித்து சசிகலா வழக்கறிஞர் சில தகவல்களை பேட்டியளித்துள்ளார். அதன்படி கோடநாடு செல்ல எங்களுக்கு எவ்வித தடையுமில்லை என சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூரப் பாண்டியன் பேட்டி கொடுத்துள்ளார்.

தடயங்கள் அழியாமல் இருக்கவும், விசாரணை தடைபடாமல் இருக்கவும் சசிகலா கோடநாடு செல்லாமல் இருந்தாக அவர் கூறினார். கோடநாடு எஸ்டேட்டில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாததால் தான் அடுத்த கட்ட விசாரணைக்கு போலீசாரால் போக முடிந்தது என்றும் பேட்டியில் தெரிவித்தார்.

சசிகலா வயது மூப்பு அடைந்த பெண்மணி என்ற அடிப்படையில் சட்டத்துக்கு உட்பட்டு வீட்டில் விசாரணை நடைபெற்றது என்றும் கூறினார். காவல்துறையினர் விசாரணை திருப்திகரமாக உள்ளது என்றும் சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூரப் பாண்டியன் கூறினார்.

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக புதிதாக புகார் எதுவும் அளிக்கவில்லை என்றும் ராஜா செந்தூரப் பாண்டியன் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top