வலிமை திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட தடை இல்லை!! உயர் நீதிமன்றம் மறுப்பு

பிப்ரவரி 24 ஆம் தேதி தல ரசிகர்களுக்கு மிகவும் மறக்க முடியாத நாளாக காணப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அஜித்தின் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகாது நிலையில் பிப்ரவரி 24ம் தேதி வலிமை திரைப்படம் வெளியானது.

வலிமை வெளியான முதல்நாளிலேயே படத்திற்கு மக்கள் வரவேற்பு அதிகமாக கிடைத்தது. ஆனால் வலிமை திரைப்படம் ஓடிடியில் வெளியாக தடை விதிக்கப்பட்டிருந்தது ஆனால் தற்போது வலிமை திரைப்படம் ஓடிடியில் வெளியிட தடையில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படத்தை ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. மெட்ரோ கதாபாத்திரங்களை வைத்து வலிமை படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மெட்ரோ கதை, கதாபாத்திரம் பயன்படுத்தப்பட்டதாக கூறுவது தவறு என்று இயக்குனர் வினோத் பதில் மனு தாக்கல் செய்தார். வலிமை படத்தை ஓடிடியில் வெளியிடவும், சாட்டிலைட் உரிமை தொடர்பாகவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது என்றும் அவர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment