புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை இல்லை!: சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு;

இந்தியாவில் உள்ள சில மாநிலங்கள் தொடர்ந்து புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து வருகின்றன. நம் தமிழகத்திலும் கடற்கரைப் பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் புதுச்சேரியில் புத்தாண்டிற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் புதுச்சேரி அரசிடம் கேள்வி கேட்டது.

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம்

ஆனால் சென்னை உயர் நீதிமன்றமே புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை இல்லை என்று அறிவித்துள்ளது. ஆயினும் பிரபலங்கள் பொது இடங்களில் பங்கேற்கக்கூடாது; தனியிடங்களில் பங்கேற்கலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இரண்டு தவணை தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கிடையில் டிசம்பர் 31-ம் தேதி இரவு 10 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை புதுச்சேரியில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

மதுபான கடைகள், பார்கள், விடுதிகள் என எந்த இடங்களிலும் மதுபான விற்பனை கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. பொது இடங்களில் மது அருந்தக்கூடாது; விடுதிகளில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் தங்கிக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு ஜனவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment