நீட் தேர்வில் விலக்கு கோரும் தீர்மானத்தில் உடன்பாடு இல்லை! எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு!!

நீட் தேர்வு மசோதா விலக்குக்காக இன்றையதினம் அனைத்துக் கட்சிக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் உள்ள ஏராளமான கட்சி சார்பில் கலந்து கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக திமுக கட்சி சார்பில் துரைமுருகன், அதிமுக கட்சி சார்பில் விஜயபாஸ்கர், பாஜக கட்சியின் சார்பில் வானதி சீனிவாசன் போன்ற எம்எல்ஏக்களும் கலந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

vana

இந்த கூட்டத்தில் இருந்து திடீர் என்று பாஜக வெளிநடப்பு செய்துள்ளது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் அனைத்து கட்சி கூட்டத்தில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்தது.

நீட் தேர்வு மசோதா விலக்கு தொடர்பான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார். நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தீர்மானத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு உடன்பாடு இல்லை என்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறினார்.

நீட் தேர்வினால் இட ஒதுக்கீடு பாதிக்கப்படுவது என்பது உண்மைக்குப் புறம்பானது என்றும்  வானதி சீனிவாசன் கூறினார். நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்பதை பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கிறது என்றும் வானதி சீனிவாசன் கூறினார். தேர்வு வருவதற்கு முன் குறைவான அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர் என்றும் வானதி சீனிவாசன் கூறினார். ஆரம்பத்தில் நீட்தேர்வு அமல்படுத்திய போது சில பிரச்சினைகள் இருந்தது என்பதை மறுக்கவில்லை என்றும் வானதி சீனிவாசன் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment