சில நாட்களாக அதிமுக கட்சியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. முதலில் சசிகலா வருகையை ஒட்டி அதிமுக கட்சியில் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது.
அதன்பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், சசிகலா பற்றி கூறிய பதிலுக்கு அதிமுக நிர்வாகிகள் இடையே பெரும் முரண்பாடு உருவானது. அதனைத் தொடர்ந்து அதிமுக கட்சியில் அடுத்தடுத்து குழப்பங்கள் நிலவி கொண்டு வரும் நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக பற்றி தனது கருத்தினை கூறியுள்ளார்.
அவர் இன்றைய தினம் காலையில் செய்தியாளர்களை சந்தித்து இவ்வாறு பேட்டியளித்தார். அதன்படி ஜனநாயக ரீதியாக தேர்தலில் வெற்றி பெற்று அதிமுகவை மீட்டு எடுப்போம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சித்துள்ளார்.அதன்படி எடப்பாடி பழனிசாமி தற்போது பலவீனமாக இருக்கிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி பற்றி விமர்சனம் செய்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் அவரிடம் தடுமாற்றம்,பயம் இருக்கிறது என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.