செய்யாறில் பரபரப்பு; மீண்டும், மீண்டும் வானில் வட்டமிட்ட ட்ரோன்!

செய்யாறில் ட்ரோன் பறந்ததால் பரபரப்பு மதியம் 12 மணியிலிருந்து தற்போது வரை மூன்று முறை வெவ்வேறு பகுதியில் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்யாறு பகுதியில் எவ்வித அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மதியம் 12 மணி அளவில் செய்யாறு ஆற்றின் மேற்பகுதியில் பறந்ததாகவும் இரண்டு மணிக்கு மேல் மார்க்கெட் பகுதியில் பறந்ததாகவும் தற்போது வெங்கட்ராயன் பேட்டை பகுதியில் பார்ப்பதாகவும் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து விரைந்து வந்த செய்யாறு வருவாய் ஆய்வாளர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ட்ரோன்களை பறக்கவிட்டது யார், எதற்காக பறக்க வைத்தார்கள் என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.