ஏழாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்: இந்த வார சனிக்கிழமையும் உண்டு!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா  நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ளது. தமிழகத்தில் சில வாரங்களாக  மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கில் கொரோனா  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.சுப்பிரமணியன்

முதலில்  இந்த கொரோனா  தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. ஆனால் பல அசைவ பிரியர்களின் கோரிக்கையை ஏற்று இந்த மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை மாற்றியமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த வாரம் நம் தமிழகத்தில் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இந்த வாரமும் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அதன்படி தமிழகத்தில் அக்டோபர் 30ஆம் தேதி சனிக்கிழமை ஏழாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். 2 லட்சத்திற்கும் குறைவானவர்கள் தான் இரண்டாவது தவணை கோவாக்சின் தடுப்பூசி போட வேண்டியது உள்ளது என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இதனால் இந்த வாரமும் இந்த மெகா தடுப்பூசி முகாமில் லட்சக்கணக்கில் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment