என் பொறுமைக்கும் ஒரு லிமிட் இருக்கு..! வார்னிங் கொடுக்கும் சமந்தா.. பின்னணி என்ன?
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் தனது காதல் கணவரான நாக சைதன்யாவை விவாகரத்து செய்தவுடன் சமூகவலைதளங்கள் பல்வேறு சர்சைகள் எழுந்து வந்தன.
ஆனால் இதனை சிறிதும் கண்டுகொள்ளாத சமந்தா தற்போது நிறைய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த காத்து வாக்குல இரண்டு காதல் படம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்கு விரைவில் இன்னொரு திருமணம் நடைபெற இருக்கிறது என்ற செய்தி சோசியல் மீடியாவில் காட்டுதீயாய் பரவி வந்தது.
குறிப்பாக அவர் நடிகையாக இருக்க கூடாது என நாக சைதன்யா கண்டிஷன் போட்டதாக தெரிகிறது. ஆனால் நாக சைதன்யா தனது இரண்டாவது திருமணம் முற்றிலும் வதந்தி, அது போன்ற ஒரு எண்ணம் தனக்கு இல்லை என திட்டவட்டமாக மறுத்து விட்டார்.
இந்த சூழலில் நடிகை சமந்தா ட்விட்டரில் கோபமான ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதாவது என்னுடைய மௌனத்தை அறியாமை என்றும், அமைதியாக இருந்தால் ஏற்றுக்கொண்டேன் என எண்ணாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அதோடு எனது கருணை பலவீனம் என்று தவறாக நினைக்காதீர்கள். எனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றும் மற்றொரு ட்வீட்டில் “அன்புக்கும் expiry date இருக்கலாம்” என குறிப்பிட்டு இருப்பது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு சைதன்யாவின் இரண்டாம் திருமணம் தான் காரணமா என்று கேள்வியெழுப்பி வருகின்றனர்.
