Connect with us

இட்லியில் இத்தனை வகையா..! கோவையில் காண்போரை மலைக்க வைத்த இட்லி திருவிழா..

202101111055206459 Tamil News tamil news Keerai Idli SECVPF 1

Tamil Nadu

இட்லியில் இத்தனை வகையா..! கோவையில் காண்போரை மலைக்க வைத்த இட்லி திருவிழா..

இட்லியில் இத்தனை வகையா..! கோவையில் காண்போரை மலைக்க வைத்த இட்லி திருவிழா..

இட்லியில் இத்தனை வகைகளா என காண்போரை மலைக்க வைக்கிறது கோவையில் நடைபெற்ற இட்லி திருவிழா. மார்ச் 30ஆம் தேதி ஆண்டு தோறும் பன்னாட்டு இட்லி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை வித்தியாசமாக கொண்டாட கோவை ராமகிருஷ்ணா கல்லூரியில் உணவு மற்றும் விடுதி மேலாண்மை துறை மாணவர்கள் 100 வகையான இட்லிகளை காட்சிக்கு வைத்துள்ளனர்.

குல்பி இட்லி, சாக்லெட் இட்லி, ஃபூருட்டி இட்லி என குழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு இட்லி முதல் பெரியவர்கள் விரும்பும் ஓட்ஸ், ரவை என ஆரோக்கிய இட்லி வகைகள் திருவிழாவில் வரிசைகட்டி காட்சிக்கு வைக்கப்பட்டன.

மண்வாசனை கமழும் பள்ளிப்பாளைய இட்லி, முடக்கத்தான் இட்லி போன்ற பல்வேறு இட்லி வகைகள் செய்யப்பட்டு உள்ளன. கார்போ ஹைட்ரேட் புரதம் கலந்து வேகவைத்து சமைக்கும் இட்லி ஆரோக்கிய உணவாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று.

பீட்சா, பர்கர் என ஓடும் இளைய முறைக்கு இட்லியில் இருக்கும் ஆரோக்கியத்தை இந்த திருவிழா மூலம் வெளிக்காட்டி இருப்பதில் ஐயம் இருக்காது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top